48
வாணியம்பாடி நடைபெற்ற ஹஜ் கமிட்டி கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,” தமிழகத்தில் இஸ்லாமிய சகோதரிகளுக்காகவும் இஸ்லாமிய மக்களுக்காகவும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய அரசாக அதிமுக அரசு விளங்கி வருவதாகவும் தற்போது ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக அரசு சார்பில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் நாட்டின் நலனுக்காகவும் உலகத்தில் வாழும் இஸ்லாமிய மக்களுக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணிகள் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவதை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் வரும் காலங்களில் இஸ்லாமிய மக்களுக்கு பெரும்பங்காற்ற கூடிய அரசாக அதிமுக அரசு வழங்கும் என தெரிவித்தார்.
You must be logged in to post a comment.