Home செய்திகள் அரசு பள்ளிகளில் உவர் நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்…

அரசு பள்ளிகளில் உவர் நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் உவர் நீரை நன்னீராக்கும் நிலையங்களை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தெரிவித்ததாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியரின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் விலையில்லா  மடிக்கணினிகள் வழங்குதல், விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல், கல்வி இடைநிற்றலை  தவிர்க்க உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட 14 விதமான மாணாக்கர் நலத்திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், 2018-2019ஆம்  கல்வியாண்டில் தற்போது 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என 24,151 மாணாக்கருக்கு ரூ.8.97 கோடி மதிப்பில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் மாணவ, மாணவியருக்கு கடந்த 5 ஆண்டுகளில் 39 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள்  வழங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 15.50 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.  இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தங்கச்சிமடம்  அரசு மேல்நிலைபள்ளி, பாம்பன் அரசு உயர் நிலைப்பள்ளி, கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் உவர் நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து இதுபோன்ற  மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என பேசினார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com