எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்மா பேரவை சார்பாக மதுரை திருமங்கலத்தில் மாபெரும் சைக்கிள் பேரணி ..

அம்மா பேரவை சார்பில் மதுரை திருமங்கலத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

அம்மா பேரவை சார்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில், மாபெரும் சைக்கிள் பேரணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் தலைமையில், நடைபெற்றது.வழி நெடுகிலும் கழக நிர்வாகிகள், தாய்மார்கள், உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பேரணியில் நகர செயலாளர் ஜே.டி.விஜயன், கழக நிர்வாகிகள் மகாலிங்கம், ராமசாமி, வக்கீல் திருப்பதி, அன்பழகன், வெற்றிவேல் சுகுமார் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக, மதுரை மாவட்ட நிருபர் கனகராஜ்