பள்ளி சிறுவன் கடத்தல் முயற்சி வட மாநில பெண் கைது – வீடியோ..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகர் அரசு மேல்நிலை பள்ளி அருகே வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி பெண் ஒருவர் அங்கே பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனை தான் வைத்திருந்த கோணி பையில் அடைத்து கடத்தி செல்ல முயன்றுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமாக இருந்த  அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தி:- பால் பாண்டி, தேனி