கீழக்கரை நகராட்சி 4வது வார்டு அனைத்து பொதுமக்கள் பாதுகாப்பு குழு கூட்டம்..

கீழக்கரை நகராட்சி 4வது வார்டு அனைத்து பொதுமக்கள் பாதுகாப்பு குழு கூட்டம் என்.சந்திரன் தலைமையில் 17 .11 .2023 மாலை ஆறு மணி அளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக என்.சந்திரன் நியமிக்கப்பட்டார் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன 1. 4வது வார்டு உட்பட்ட மறவர் தெரு, கிழக்கு நாடார் தெரு, கிருஷ்ணாபுரம், இந்து பஜார், தட்டார் தெரு பகுதிகளில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது இதை தடுத்து நிறுத்த கூறி தீர்மானம் இயற்றப்பட்டது. இது சம்பந்தமாக கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் அளிப்பது..

2. மறவர் தெரு மையப் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான பழுதான கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரிடம் கட்டிடத்தை அப்புறப்படுத்த குழுவின் சார்பாக கோரிக்கை வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் என்.சந்திரன், ஆர்.மகாலிங்கம், ஏ.ஜெயராமன்,  கே.சங்குத்துறை, ஜி.சௌந்தரராஜன், கே. ஆர் சுரேஷ், ஆர். பாபு, பி.முருகானந்தம், எஸ். முரளி,  எம். மாரியப்பன், ஜி.முருகானந்தம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது