Home செய்திகள் மதுரை  மாநகராட்சி பொதுமக்கள்  குறைதீர்க்கும் முகாம் மேயர்   இந்திராணி  பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது..  

மதுரை  மாநகராட்சி பொதுமக்கள்  குறைதீர்க்கும் முகாம் மேயர்   இந்திராணி  பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது..  

by ஆசிரியர்

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், முன்னிலையில் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த்  தலைமையில்   நடைபெற்றது.

மதுரை  மாநகராட்சி  மண்டலம் 1  அலுவலகத்தில்  காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி  பெயர் மாற்றம் வேண்டி 3 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 5 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி 5 மனுக்களும்,  சாலை வசதி வேண்டி 5 மனுக்களும், பாதாளச்சாக்கடை இணைப்பு வேண்டி 10 மனுக்களும், தெரு விளக்கு வசதி வேண்டி 2 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 4 மனுக்களும்,  இதர கோரிக்கைகள் வேண்டி 3 மனுக்களும்  என ,மொத்தம் 37 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து  மேயரால், நேரடியாக பெறப்பட்டது. சென்ற குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 20 மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.    

இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, துணை ஆணையாளர் சரவணன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார்,  உதவி ஆணையாளர் ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவிப் பொறியாளர்கள் மணியன், ஆரோக்கிய சேவியர், சோலை மலை, பாபு, முருகன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், மாநகராட்சி அலுவலர்கள்,  பொதுமக்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com