
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுக் குழு கூட்டம் வடக்குத்தெரு சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் முஸம்மில் இபுறாகீம், செயலாளர் தாஜுல் அமீன், பொருளாளர் ஜாபிர் சுலைமான், இணைச் செயலாளர் அஹமது மிர்சா, மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது ஹமீது சல்மான்கான் முன்னிலை வகித்தனர் .
இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது மகமூது ரிஃபான், செய்யது ரசீன் அஹமது, சேகு ஜலாலுதீன், சங்க உறுப்பினர்கள் முஹம்மது அயூப்கான், முஹம்மது அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடியுரிமை திருத்த சட்டத்தினை இரத்து செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தும், கீழக்கரையில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை ஒழிக்க, மாவட்ட போதை தடுப்பு துறையினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்,கீழக்கரை தாலுகா அரசு பொது மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தவும், கீழக்கரை காவல் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும்,. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் கைவசம் இருக்கும் முகம்மது காசீம் அப்பா தர்ஹா எதிர்புறம் இருக்கும் பழைய உரக் கிடங்கு இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்றும் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
You must be logged in to post a comment.