இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஆலோசனை..

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் அஜீஸ் பாய் தலைமை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய செயலர் முனியசாமி முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய பிரதிநிதி முருகானந்தம் வரவேற்றார்.

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரும் இறுதி எச்சரிக்கை உண்ணாவிரத போராட்டம் சென்னையில் பிப்ரவரி 6 ஆம் நடக்கவுள்ளது. இதில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூறு வாகனங்களில் செல்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலர் அஜீஸ் பாய் கூறுகையில், எஸ்சி., பட்டியலில் இருந்து வெளியேற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுடன் இணைப்பதுடன் தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். இதை வலியுறுத்தி புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் பிப்.6 இல் நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளோம் என்றார்.

கீழக்கரை நகர் செயலாளர் சந்திரன் நன்றி கூறினார். நிர்வாகிகள் ராதா, முனியசாமி,  ராமு, திரவிராஜன், சந்திரன் , மகேந்திரன், பிரசாந்த் குமார், கதிரவன், லோகேஸ்வரன், கணேஷ்பாண்டி, தினேஷ், தட்சிணாமூர்த்தி திருமுருகன், பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்