சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ப்ளாஸ்டிக் பை பயன்பாட்டுத்தடை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்..

சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நெகிழி (Plastic Carry Bag)  பயன்பாடு தடை குறித்த தமிழக அரசின் அரசாணை 01-01-19 முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

எனவே நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்யும் வகையில் ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை பணிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் 28-12-18 இன்று சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பா.கணபதி (கி.ஊ) திரு.சுப்பிரமணியன் (வ.ஊ), மண்டல துணை வ.வ. அலுவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.சூசைப் பாண்டியன் சங்கரன்கோவில், வட்டார மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் திரு.மாரியப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் துறை அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்தல் குறித்த அரசாணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்