கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மஹ்மூதா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் ..

சித்தார்கோட்டையில் வரும் 28-12-2017, வியாழன் மதியம் 02.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மஹ்மூதா கல்வி அறக்கட்டளையினர் இணைந்து பெண்களுக்கான புற்றுநோய் விழப்புணர்வு மருத்துவ முகாம் நடத்துகின்றார்.

இம்முகாம் சித்தார்கோட்டை மேனேஜர் ஹாஜி சீ.தாவூது மரைக்காயர் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் மருத்துவர் மருதம் கனகராஜ் மற்றும் கனகப்ரியா பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை ஆலோசனை வழங்க உள்ளார்கள்.

மேலும் இம்முகாமை டாக்டர் ஜெகதீஸ்வரன் சந்திரபோஸ் துவக்கி வைக்கிறார். டாக்டர் ஏ. அலாவுதீன் இம்முகாமிற்கு முன்னிலை வகிக்கிறார்.