Home செய்திகள் தென்காசி நகராட்சி சார்பில் மருத்துவ முகாம்..

தென்காசி நகராட்சி சார்பில் மருத்துவ முகாம்..

by ஆசிரியர்

தென்காசி நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டி.பி.சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ முகாமினை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர். தூய்மையே சேவை முகாம் செப்டம்பர்-15 முதல் அக்டோபர்-2 வரை அனுசரிக்கவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாக இயக்குனர், சென்னை, மண்டல இயக்குனர்- திருநெல்வேலி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தென்காசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், டி.பி.சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் தென்காசி கீழப்புலியூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை நகர்மன்ற தலைவர் சாதிர், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். அப்போது பணியாளர்களின் உடல் நலனின் முக்கியத்துவம் குறித்து நகர் மன்ற தலைவர் சாதிர் வலியுறுத்தினார். ஆணையாளர் மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து பணியாளர்களுக்கு விளக்கி கூறினார்.

இந்த நிகழ்வில் நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். மருத்துவ அலுவலர்கள் மணிகண்டன், சபிதாபானு, கண் பரிசோதனைகள் காதர், மருந்தாளுநர் பேச்சிமுத்து, நகர் நலமைய சுகாதார ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன், ஈஸ்வரன், மாதவன்,துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்து மாரியப்பன் துரைசாமி, சுடலை, சுப்பிரமணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் தங்கப்பாண்டியன், அறங்காவலர் அருணாச்சலம், மாணவரணி மைதீன், தம்பிராஜன், ராஜன் இளைஞரணி முரளி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர் ராம் சுப்பிரமணி என்ற சந்துரு நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!