Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது..

கீழக்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.18-

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை நகராட்சி, தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு, வீடுகளில் இருந்து தேங்கும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான், ஆணையர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். மரக்கன்று நடுதல், மனித சங்கிலி, மணற் சிற்பம், பேரணி, சைக்கிள் பேரணி, விழிப்புணர்வு நாடகம் நடந்தன. சைக்கிள் பேரணியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

“CYCLOTHON” நிகழ்ச்சியில் குழுக்கள் முறையில் நமது மதரஷா மாணவர்கள் “முஹம்மது அஸார்” இரண்டாம் இடத்தையும், “அப்துல் மஃபாஸ்” மூன்றாம் இடத்தையும் பெற்றனர்..

மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன் மற்றும் கவுன்சிலர்கள் நஸ்ருதீன், பாதுஷா மீரான் அலி, ஷேக் உசேன், பயாஸ், மூர் நவாஸ்,  மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி. முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, வடக்கு தெரு நாசா மதரஸா மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!