Home செய்திகள் தரங்கம்பாடி அருகே 6 மாடுகள் மர்ம சாவு –போலீசார் விசாரணை

தரங்கம்பாடி அருகே 6 மாடுகள் மர்ம சாவு –போலீசார் விசாரணை

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் 5 பசுமாடுகள்,1 கன்றுக்குட்டி ஒன்றன்பின் ஒன்றாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.கணேசன் (60) இவர் கடந்த 15 வருடங்களாக பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவி சித்ரா, மகன்கள் நாகராஜ், தினேஷ் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், சனிக்கிழமை இரவு மாடுகளுக்கு கணேசன் தீவனங்கள் வைத்துள்ளார். குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்து உள்ளது. கொசு கடிப்பதால் மாடுகளை தனக்கு சொந்தமான கொள்ளையில் கட்டவிழ்த்து விட்டுள்ளார். சிறுது நேரம் கழித்து 4 கரவைமாடுகள், கருத்தரிக்கபட்ட 1 பசுமாடும், 1 கன்று குட்டி உள்ளிட்ட 6 மாடுகள் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஒன்றன்பின் ஒன்றாக இறந்துள்ளது.

தகவலறிந்த பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சென்ரு மாடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த மாடுகளுக்கு வழங்கப்பட்ட உணவில் மற்றும் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்துள்ளதா என்று கால்நடை மருத்துவர்கள் இறந்த மாடுகளை பரிசோதனை செய்து வருகின்றனர். பசுமாடுகள் இறப்பு சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பசுமாடுகள் இறப்பு – முறையான விசாரணை நடத்த வேண்டும்.இந்து மக்கள் கட்சி கோரிக்கை.தரங்கம்பாடி அருகே புதுப்பாளையத்தில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து 6 பசுமாடுகள் இறந்துள்ளன.இதில் ஒரு சின்னமாடும் அடக்கம்.ஆறு பசு மாடுகள் ஒரே இரவில் இறந்து போனது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பசுவை தெய்வமாக வணங்கும் நம்பிக்கை உடையவர்கள் இந்துக்கள். பசுக்கள் திடீரென இறந்து போவது சந்தேகத்திற்குரியது. சில நாட்களுக்கு முன் திருவிடைக்கழியில் நான்கு பசு மாடுகள் இறந்து போயின.தொடர்ந்து பசு மாடுகள் இறந்து போவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.பசுக்கள் இறந்து போனதற்கான உண்மையான காரணம் குறித்து மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஜெ. சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!