மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி தற்போது வரை மதுரையில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மதுரை புறநகர் பகுதியில் மிக தாழ்வாக உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது மேலும் நகர் பகுதிகளிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக மேலும் சில நாட்கள் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்