Home செய்திகள் இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனரா?? சம்பந்தப்பட்ட துறை விசாரித்து நடவடிக்கை எடுக்குமா??

இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனரா?? சம்பந்தப்பட்ட துறை விசாரித்து நடவடிக்கை எடுக்குமா??

by ஆசிரியர்

மதுரை விமான நிலையத்துக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான மூலம்  இலங்கை., சார்ஜா., துபாய்., சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணித்து வருகின்றனர். முக்கியமாக தென்மாவட்ட மக்கள் வசதியை கருதி மதுரை விமான நிலையத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஆனால் அங்குள்ள சுங்க அதிகாரிகள் பயணிகளை தரக்குறைவாகவும், திருடர்களை போல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.  இதனால் மதுரை விமான நிலையம் என்றாலே விடுமுறை… வியாபாரத்திற்கு வருகிறோம் என்பதை தாண்டி ஒரு பயத்துடனே பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில்  2 குழந்தைகள் உட்பட 109 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக வந்த பயணிகள் சில பொருட்களை அனுமதித்த அளவை விட அதிமாக எடுத்து வந்ததால் அபராதம் விதிப்பதை தாண்டி சுங்கத்துமறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட பயணிகள் காயங்களுடன் விமான நிலையத்தில் வெளியில் அமர்ந்து ணமூக வலைதளங்களில் புகார் தெரவித்தது ப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. அப்பயணிகள்  இந்தியாவை சேர்ந்த செல்வகுமார்., இலங்கையை சேர்ந்த முகமது சில்மி., சந்திர சாகர்., சதீஸ்வரன் உள்ளிட்ட வியாபாரிகள் 15 பேர் என தெரியவருகிறது. 

இத்தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த 3 பயணிகள் தாக்கப்பட்டதால் இச்சம்பவத்தை இந்தியாவில் இலங்கை தூதரகத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறினர்.

மேலும் மதுரை விமான நிலையத்தில் சட்ட விரோதமாக பொருட்கள் கொண்டு வருபவர்கள் மீது உரிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இது போல் செயல்பட்டு வருவதாகவும்,  இதற்கு திருச்சி சுங்கத்துறை உதவி ஆணையர் இப்புகார் தொடரபாக  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. 

இது குறித்து மதுரை விமான நிலைய துணை ஆணையரிடம் தொடர்பு கொண்டு விசாரித பொழுது தாங்கள் ஏதும் தாக்கவில்லை மற்றும் அப்பயணிகள் வேண்டுமென்றே தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்று நம்மிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!