Home செய்திகள் சோழவந்தான் பேரூராட்சியில் கவுன்சிலர் சரமாரி கேள்வி. பதில் சொல்லமுடியாமல் தலைவர் மற்றும் செயல் அலுவலர் தினறல்.

சோழவந்தான் பேரூராட்சியில் கவுன்சிலர் சரமாரி கேள்வி. பதில் சொல்லமுடியாமல் தலைவர் மற்றும் செயல் அலுவலர் தினறல்.

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தலைவர் மற்றும் செயல் அலுவலர் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கலந்துகொண்ட பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி தலைவரைப் பார்த்து 8வது வார்டில் அடிப்படை தேவைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் மேலும் R.MS. காலனியில்.புதிய நூலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சண்முகானந்த பவன் முன்பு உள்ள பொது கழிப்பறையில் சுகாதாரக்கேடு தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் கழிப்பறை முன்பு உள்ள குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும் எனவும் தலைவர் மற்றும் செயல் அலுவலரை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்மேலும் பேரூராட்சியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் திட்டங்களில் நிறைய குளறுபடிகளும் முறைகேடுகளும் நடப்பதாகவும் கேள்வி எழுப்பினார் அதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் செயல் அலுவலர் மற்றம் கவுன்சிலர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்ப முயன்றனர் ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதுமுதனைதொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சண்முகபாண்டி மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் டீக்கடை கணேசன் ஆகியோரும் புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் தெளிவான வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் ஆன்லைனிலேயே ஒப்பந்தப் புள்ளியை முடித்துக் கொள்வதாக தங்களது அதிருப்தியை தெரிவித்தனர் இதனால் கூட்டத்தில் மேலும் சலசலப்பு அதிகமானதுஒருவழியாக அனைவரையும் சமாதானப்படுத்தி தற்காலிகமாக கூட்டத்தை முடித்த அதிகாரிகள் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை பரிசீலிக்கபடும் எனவும் புதிய திட்டங்கள் தொடங்குவது பற்றி மீண்டும் ஒருமுறை கூடி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கவுன்சிலரிடம்இதுபற்றி கேட்டபோது பேரூராட்சி சார்பில் நடைபெறும்.எந்த ஒரு நிகழ்ச்சிக்கு எங்களுக்கு முறையாக.அழைப்பு அனுப்பப்படவதில்லை முறையாக கூப்பிடுவதும் இல்லை தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தங்களின் மன வேதனையை தெரிவித்தனர்திமுக நெருக்கடியான சூழ்நிலையில் சோழவந்தான் .பேரூராட்சியைக் கைப்பற்றியதுஆனால் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் ஒருவித மன வருத்தத்தை தருகிறது கவுன்சிலர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத சூழ்நிலை நிலவுவதால் எப்போது வேண்டுமானாலும் பேரூராட்சியின் நிலைமை மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத கவுன்சிலர்கள் தெரிவித்தனர்ஆகையால் கட்சித் தலைமை தலையிட்டு கவுன்சிலர்களுக்குஇடையே ஒரு புரிந்துணர்வு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனவும் தலைவர் மற்றும் செயல் அலுவலரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!