Home செய்திகள் முதியோர் இல்லத்தில் குடிநீர் தொட்டி அமைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

முதியோர் இல்லத்தில் குடிநீர் தொட்டி அமைத்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

by mohan

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் குடிநீர் தொட்டி வழங்குதல் சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த முதியோர் இல்லத்தில் பழைய குடிநீர் தொட்டி சேதமடைந்ததால் வெயில் காலம் தொடங்கிய நிலையில் பெரியோர்களுக்கு தாகம் தீர்க்க சிரமம் ஏற்பட்டது.இது வழிகாட்டி மணிகண்டன் கவனத்தில் வந்ததும் தனது தனிப்பட்ட சேமிப்பு மூலம் புதிய தரமான குடிநீர் தொட்டி வாங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லத்தில் அமைத்து தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் கூடுதலாக மதுரையை சேர்ந்த மூன்று சாதனையாளர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் கின்னஸ் உலக சாதனை படைத்த ஐந்து வயது சம்யுக்தா, கடல்நீரில் வாயுக்களை பிரித்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடித்த பதிமூன்று வயது இளம் விஞ்ஞானி அகிலேஷ் மற்றும் தேசிய அளவிலான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இளையோர் நாடாளுமன்ற போட்டியில் வென்று தமிழ்நாட்டின் சார்பில் நாடாளுமன்ற கூட்டத்தில் பார்வையாளராக பங்கேற்ற நந்தகுமார் ஆகியோருக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேசிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்: மக்கள் தங்கள் வருமானத்திற்கு தகுந்தவாறு அதிகமாகவோ குறைவாகவோ அடுத்தவருக்கு தங்களால் இயன்ற அளவு உதவிகளை தொடர்ந்து செய்து வரவேண்டும்.மேலும் நம்மில் பல சாதனையாளர்கள் ஊக்கப்படுத்தி உலகறியச் செய்ய வேண்டும் என்று கூறினார்.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக்மஸ்தான், கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார், மாற்றம் தேடி பாலமுருகன், மக்கள் தொண்டன் அசோக்குமார், எம்மால் இயன்றது கண்ணன், சமூக சேவகர் செந்தில்குமார், உதவும் உள்ளம் பெரியதுரை, என் மக்கள் அமைப்பின் ஜாகிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!