Home செய்திகள் சோழவந்தான்.எம்.வி.எம்.பள்ளியில் குழந்தைகள் நல சிறப்பு முகாம்.

சோழவந்தான்.எம்.வி.எம்.பள்ளியில் குழந்தைகள் நல சிறப்பு முகாம்.

by mohan

சோழவந்தான் எம்.வி.எம்.கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நல சிறப்பு முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.வாடிப்பட்டி வட்டாரத்தில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை உயரம் அளவீடு செய்யும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்,போஷான் அபியான் திட்டத்தின் கீழ் நாட்டில் ஆரோக்கியமான குழந்தைகளை கொண்டாடுவதற்காக ‘ஸ்வஸ்த பாலக் பலிகா ஸ்பர்தா’ என்ற சிறப்பு முகாம் மூலம் செயல்படுத்தபடுகிறது, இத்திட்டத்தில் வாடிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட 119 குழந்தைகள் மையம் மூலம் எடை உயரம் அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த வாரம் முழுவதும் மழலையர் பள்ளிகள்,மருத்துவமணைகளிலும் எடை உயரம் எடுக்கப்படும்.இதன்படி எம்.வி.எம்.பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு தாளாளர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் தலைமை தாங்கினார்.முதல்வர் தீபாராகிணி முன்னிலை வகித்தார்.அங்கன்வாடி பணியாளர் உமா வரவேற்றார்.வாடிப்பட்டி வட்டார குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் திருமகள் முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.இதையடுத்து 6 வயது வரையிலான மாணவ,மாணவியர்க்கு உயரம்,எடை அளவீடு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதா, திட்ட உதவியாளர் சங்கர், மேற்பார்வையாளர்கள் பாண்டியம்மாள், செல்வி,அங்கன்வாடிப் பணியாளர் பிரியா,உதவியாளர் சரவண வள்ளி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.இதே போல் இப்பகுதியில் உள்ள பல பள்ளிகளில் இந்த முகாம்கள் நடைபெற்றது.தொடர்ந்து இப்பள்ளியில்கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதற்குதாளாளர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.முதல்வர் தீபாராகிணி வரவேற்றார்.இதையடுத்து கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில்,6 முதல் 8 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com