மதுரை மாவட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் மேம்பாட்டு நலத் துறை சார்பாக இளைஞர்களுக்காக இந்தியாவில் இளைஞர் நலன் மற்றும் சாதனைகளை நேர்த்தியாக கையாளுதல் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு இன்று 18 3 2020 தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.மேலும் ,மாணவர்கள் சைபர் குற்றங்களிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் இணைய வழி குற்றங்கள் மாணவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மாணவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மூலம் இணைய குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் குற்றங்கள் மாணவர்களை தவறான வழிக்கு எடுத்துச்செல்லும் அதனை அறவே தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் நவீன சாதனங்களை நல்லமுறையில் கையாளுதல் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள்.நவீன சாதனங்களை நல்வழிகளில் பயன்படுத்தி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மாணவர்கள் தங்களின் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.