Home செய்திகள் மதுரையில் வீடு புகுந்து 45 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து இருவர் கைது.

மதுரையில் வீடு புகுந்து 45 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து இருவர் கைது.

by mohan

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த விமலநாதன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி இரவு அவரது வீடு புகுந்து சில மர்ம நபர்கள் வீடு பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 45 சவரன் தங்கநகை திருடி சென்றுள்ளனர் என்பது வீட்டிற்கு வந்து பார்த்த போது தெரிய வந்துள்ளது.இதனைதொடர்ந்து மதுரை திலகர் திடல் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவுபடி தெற்கு துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் உதவி ஆணையாளர் உதவி ஆணையாளர் மகேந்திர பிரசாத் மற்றும் பழனிகுமார் ஆலோசனைப்படி குற்றப்பிரிவு தனிப்படை சார்பு ஆய்வாளர் மணிக்குமார் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சகாய கிறிஸ்டி அமலநாதன் ஜெகதீசன் சுந்தரம் இதய ராஜா முதல் செந்தில் இளஞ்செழியன் ஆகியோர் உதவியுடன் நிலை காவலர்கள் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள் மதுரை சப்பாணிகோவில் சந்தை சேர்ந்த பொன்மணி, (வயது 19) மற்றும் காஜா தெருவை சேர்ந்த சுந்தரேசன், (வயது19)என்பது கண்டறியப்பட்டு இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து திருடுபோன நகைகளை மீட்டு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தினர்.மேலும் மதுரை மாநகர காவல்துறை நகரின் 2719 முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 12,200 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு நகரம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது . குற்றச் சம்பவங்களைத் தடுப்பதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் CCTV- யின் பங்கு பெரும் உதவியாக இருப்பதால் , பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் CCTV கேமாராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!