Home செய்திகள் நீட் தேர்வால் தான் வெளிநாடு சென்று படிக்க வேண்டி இருந்தது.-உக்ரேனில் இருந்து திரும்பிய மதுரை மாணவன் பேட்டி.

நீட் தேர்வால் தான் வெளிநாடு சென்று படிக்க வேண்டி இருந்தது.-உக்ரேனில் இருந்து திரும்பிய மதுரை மாணவன் பேட்டி.

by mohan

படிப்பை பாதியில் நிறுத்தி தாயகம் திரும்பிய எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் படிப்பிற்கு மாற்று ஏற்பாடு தமிழக அரசும், மத்திய அரசும் செய்ய வேண்டும்.-உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய மாணவர் தாயார் கண்ணீர் மல்க பேட்டிஉக்ரைனில் நடைபெற்று வந்த ரஷ்யாவின் போர் தாக்குதல் காரணமாக உக்கிரைனுக்கு மருத்துவ படிப்பிற்கு சென்ற மாணவர்கள் தாயகம் திரும்ப வதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான விமானங்களை அனுப்பி மாணவர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய மதுரையை சேர்ந்த மாணவர்கள் நேற்று (05/03/20211) மாலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மதுரை மாணவர் சரவணக்குமார் கூறுகையில்நீட் தேர்வு மற்றும் மருத்துவ படிப்புக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தான் வெளிநாடுகளில் சென்று படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் இருந்து வெளியேறி நான்கு நாட்களாக பார்டரில் தங்கியிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தோம். இதற்காக முழுமூச்சாக முயற்சித்த தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.சரவணகுமாரின் தாயார் கூறுகையில்மருத்துவப் படிப்பிற்காக சென்று உக்ரேனில் சிக்கித்தவித்த எங்கள் பிள்ளைகளை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எங்கள் பிள்ளைகளின் படிப்பை தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.மதுரை திரும்பிய மாணவி ஜனனி கூறுகையில்26ஆம் தேதி நாங்கள் இருந்த பகுதியில் போர் பதட்டம் அதிகமானதால் மிகவும் அச்சத்துடன் இருந்தோம். அதை தொடர்ந்து அங்கிருந்து எங்களை பத்திரமான ஒரு இடத்திற்கு மாற்றி இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி திரும்பினோம். தாயகம் திரும்பிய எங்களுக்கு பாதுகாப்பான இடம் மற்றும் உணவு முதலியவற்றை செய்துகொடுத்து மத்திய அரசு உதவியது மேலும் அங்கு சிக்கியுள்ள உங்கள் நண்பர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com