Home செய்திகள் காரியபட்டியில் பார்வையற்றோர் குடும்பத்தினருக்கு கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி.

காரியபட்டியில் பார்வையற்றோர் குடும்பத்தினருக்கு கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி.

by mohan

காரியாபட்டியில், பார்வையற்ற குடும்பத்தினருக்கு கோதானம் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ,இன்பம் பவுண்டேசன் சார்பாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை தரம் உயர்வதற்காக மாதந்தோறும் கோதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.காரியாபட்டி வட்டாரத்தில் 10 நபர்களுக்கு கோதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, மிகவும் வறுமையில் இருக்கும் பெண்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மாற்றுதிறனாளி களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு கோதானம் வழங்கப்படும். காரியாபட்டி தோணுகால் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற செந்தில் மாரிமுத்து குடும்பத்தினருக்கு பசுதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்பம் பவுண்டேசன் நிர்வாகிகள் தமிழரசி போஸ் – தலைமை வகித்தார். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடது .ஆசிரியர் பொன்ராம் – சித்ரா தம்பதியர்கள் பார்வையற்ற குடும்பத்தினருக்கு கோதானம் செய்தனர். நிகழ்ச்சியில் ,ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார் வழக்கறிஞர் செந்தில்குமார் சமூக ஆர்வலர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரன், அன்னை தெரஸா இளைஞர் மன்ற செயலாளர் அருண் பாண்டியராஜன் உட்பட. பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com