Home செய்திகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் விவசாயின் மகள்.கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் விவசாயின் மகள்.கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

by mohan

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பானா மூப்பன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி இவரது மகள் தங்க பேச்சி இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார் அதில் வெற்றி பெற்று கலந்தாய்வில் தனியார் மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்ததால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியை தொடர முடியவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் எக்ஸாம் எழுதி 256 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாக கூறியுள்ளது தங்கும் விடுதி உட்பட இதர செலவினங்களுக்காக எந்த ஒரு பொருளாதார சூழ்நிலையும் இல்லாத நிலையில் உள்ளதால் தமிழக அரசு அல்லது சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டுமென அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாணவி தங்க பேச்சு கூறியதாவது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பா னா மூப்பன் பட்டி கிராமம் எங்களது எனது தந்தை சன்னாசி எங்களை மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கல்வி வரை படிக்க வைத்துள்ளார் நாங்கள் நான்கு பேர் பெண் குழந்தைகள் சிறுவயது முதலே எனக்கு டாக்டராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது அதற்காக கஷ்டப்பட்டு படித்தேன் அரசு வழிகாட்டுதல்படி நீட் தேர்வில் பாஸ் செய்தேன் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததால் கடந்த ஆண்டு படிப்பைத் தொடர முடியவில்லை அதற்குப் பின்பாக தமிழக அரசு கட்டணத்தைச் செலுத்தி வருவதாக தகவல் கிடைத்தது பின்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டேன் அதிலும் தனியார் கல்லூரி கிடைத்தது மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள எனக்கு இதர செலவினங்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது அதனால் கல்வியை தொடர முடியவில்லை. தொடர்ந்து இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் எக்ஸாம் பாஸ் செய்துள்ளேன் மருத்துவ கலந்தாய்வில் எனக்கு கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்துகிறது ஆனால் இதர செலவினங்களுக்கு என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை தந்தையும் தாயும் கூலி வேலை செய்து நான்கு பெண் பிள்ளைகளை பாதுகாத்து வருகின்றனர் எங்களின் வருமானம் குடும்பத்தை நடத்தவே பற்றாக்குறையாக உள்ளது இந்தச் சூழ்நிலையில் என்னால் இதர செலவினங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பள்ளிப்படிப்பு செல்லும்போதே காலையில் வயலில் வேலை செய்து பின்புதான் பள்ளி செல்வேன் விடுமுறை நாட்களில் தினக்கூலி வேலைக்கு அருகாமையில் உள்ள வயல்வெளிகளில் மல்லிகைப்பூ பறிக்கும் வேலை செய்வேன் அதில்தான் நோட்டுப் புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன் தற்போது மருத்துவ கல்லூரிக்கு தேவைப்படும் புத்தகங்கள் அதிக விலையில் இருக்க வாய்ப்புண்டு இதனால் செய்வதறியாது திகைத்து வருகிறோம் இதுகுறித்து அரசு பரிசீலித்து இதர செலவுகளையும் ஏற்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் ஏதாவது உங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.தொடர்ந்து 7.5 இட ஒதுக்கீட்டால் தாம் தேர்வில் வெற்றி பெற்றதாகவும் என்னைப் போல கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீட்டின் அளவை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தங்க பேசியின் தந்தை சன்னாசி கூறும்போதுமதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தாலுகா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது கடந்த காலங்களில் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெற்ற இடமாகும் அப்படி இருந்தும் எனது நான்கு பெண் குழந்தைகளையும் ஊராரின் பேச்சுக்கு இடமளிக்காமல் அவர்களுக்கு தேவையான கல்வியை அளித்து வந்தேன் எனது சக்திக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் செய்து வந்தேன் அதனால்தான் எனது மகள் தங்க பேச் சி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் இது ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு பக்கம் கவலையாகவும் உள்ளது மேற்படிப்பு கூடுதல் செலவாகும் என்பது அனைவரும் அறிந்ததே தினக்கூலி வேலை பார்த்துவரும் நான் அவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது எனவே அரசும் சமூக ஆர்வலர்களும் தங்களுக்கு உதவ வேண்டும் சமூகத்தில் ஆண்-பெண் பேதமற்ற மாற்றத்தை ஏற்படுத்த என்னால் முடிந்த உதவி செய்துள்ளேன் எனது மகள் மருத்துவராகி சேவை செய்ய காத்திருக்கிறார் ஆனால் அதற்கு பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை இதை அரசியல் பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் உணர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றார். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்…9025479429

செய்தியாளர் குழு மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!