மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக் இவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். அந்த குடோனில் இருந்து அதிகமாகப் புகை வெளியே வந்ததை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பஞ்சால் செய்யப்பட்ட பொருள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.இதனை அடுத்து அனுப்பானடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடிப்படையில் அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு வாகனங்கள் மூலம் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். குடோனில் இருந்த சோபா மெத்தை என அனைத்து பொருட்களும் பஞ்சு மூலம் செய்யப்பட்டதால் தீ விபத்தில் மொத்தம் கருகி நாசமானது. இதனால் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு காரணம் மின்கசிவால் அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவனியாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருக்குள் இருந்த பஞ்சு குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.