Home செய்திகள் பரவை பேரூராட்சியில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சித் தலைவர் பதவியை ரத்து செய்ததை கண்டித்துபோராட்டம்.

பரவை பேரூராட்சியில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சித் தலைவர் பதவியை ரத்து செய்ததை கண்டித்துபோராட்டம்.

by mohan

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஆதார் கார்டு ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கப் போவதாக அறிவிப்புமதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பரவை பேரூராட்சி இதில் 15. மற்றும் 16 வது வார்டு காட்டு நாயக்கர் சமூகத்தினர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது சுழற்சி முறையில் கடந்த தேர்தல் அறிவிப்பின் போது பேரூராட்சி தலைவர் பதவியும் பழங்குடியினர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பானையில் 15 மற்றும் 16 வது வார்டு பொது வார்டாக மாற்றப்பட்டது பேரூராட்சி தலைவர் பதவியும் பொது பட்டியலில் மாற்றப்பட்டது இதனால் இந்த விஷயம் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர் மத்திய மாநில அரசு மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக மரு பரிசீலனை செய்து பொதுப்பிரிவினருக்கு மாற்றிய பறவை பேரூராட்சி தலைவர் மற்றும் 15 மற்றும் 16 வது வார்டு உறுப்பினர் ஆகியவற்றை மீண்டும் பழங்குடியினர் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வரும் திங்கட்கிழமை தங்களது ஆதார் கார்டு ரேஷன் கார்டு தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த இருப்பதாக கூறினார்.இதுகுறித்து காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சங்கத் தலைவர் அழகுராஜா கூறும்போது கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். பல்வேறு போராட்டங்களை நடத்தி காட்டு நாயக்கர் என சாதிச்சான்றிதழ் பெற்றோம். கடந்த நான்கு உள்ளாட்சி தேர்தல்களில் பரவை பேரூராட்சிக்குட்பட்ட 15 மற்றும் 16வது வார்டு பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் .கடந்த தேர்தல் அறிவிப்பின் போது பரவை பேரூராட்சி தலைவர் பதவியும் பழங்குடியினர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நாங்கள் அதற்காக தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்தோம். கொரானா நோய் தாக்கத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி அன்று வெளிவந்த அரசாணையின்படி 15 மற்றும் 16 வது வார்டு பொதுவாக மாற்றப்பட்டது. அதேபோல பேரூராட்சி தலைவர் பதவியும் பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவியை பறப்பது போலவும் எங்களின் உரிமையை பறிப்பது போல் உள்ளது. இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து, வேட்டைநாய் குடுகுடுப்பை உள்ளிட்டவற்றைக் கொண்டு நடைபயணமாக பரவை சத்தியமூர்த்தி நகரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மனு அளித்து பின்னர் மலையில் குடியேற இருப்பதாக கூறினார். மேலும் அங்கிருந்த பெண்கள் கூறும்போது எங்கள் எங்களின் உரிமையை பறிக்கும் யாராக இருந்தாலும் எங்கள் பகுதிக்கு வாக்குகள் சேகரிக்க இனி வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் அவர்களை விரட்டி அடிப்போம் என்றும் ஆவேசத்துடன் கூறினர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!