மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைபொருள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி பல்வேறு நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.அதன்படி மதுரை சோழவந்தான் காவல் நிலையத்தில் தாக்கலான கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூவேந்திரன் (23), ஜெயசூர்யா (22), சுபாஷ் (21), சிவா (21) ஆகிய நான்கு நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவின்படி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர்.தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி 4 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கி நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் மதுரை மாவட்டத்தில்இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.