Home செய்திகள் மதுரை மாட்டுத்தாவணியில் நிரந்தர காய்கறி மார்க்கெட்.

மதுரை மாட்டுத்தாவணியில் நிரந்தர காய்கறி மார்க்கெட்.

by mohan

மதுரை மாட்டுத்தாவணியில், நிரந்தர காய்கறி மார்க்கெட் கட்ட வேண்டும் என, சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ளனர்.அந்த அமைப்பினர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மதுரை மாட்டுத்தாவணியில் நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு,27 ஏக்கரில், 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி,ஒப்புதல் பெறப்பட்டு திட்டத்தின் கீழ் தமிழக வேளாண் துறை மதுரை விற்பனை குழு மூலம் ரூபாய் 85 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் துவங்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, திட்டத்தை ( நிரந்தர காய்கறி மார்க்கெட் ) அரசாணையின்படி விரைந்து செயல்படுத்ததமிழக முதல்வர், அனுமதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை மாட்டுத்தாவணியில் மக்கள் பணியில் ஈடுபடும் எம்ஜிஆர் சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு ( காய்கறி வெங்காயம் தேங்காய் விலை மல்லி புதினா உள்ளிட்ட 11 சங்கங்களின் கூட்டமைப்பு ) மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com