மதுரை காந்தி மியூசியத்தில், காந்தி சிலைக்கு தமிழக முதல்வர் மாலை அணிவிப்பு.

காந்தி ஜயந்தியையொட்டி, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் இடம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பணிகளையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி, மதுரை எம்.பி. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..