மதுரை விமான நிலையத்தில் தூபாய் செல்ல வேண்டிய பயணிகள் ராபிட் டெஸ்ட் தாமத்தினால் 2 மணிநேரம் காத்திருப்பு.

மதுரை மாவட்டம் -திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இன்று (01.10.21) முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் புறப்பட்டு செல்கிறது. கொரானா பெருந்தொற்று காரணத்தினால் .கடந்த ஆறு மாதமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானம் செல்லவில்லை.இந்னிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்பாட்டின்படி துபாய் செல்ல பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். 180 பயணிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில் இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்.’ அவர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி டிராபிக் டெஸ்ட் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .அதன்படி துபாய் செல்ல ஆறு மணி நேரத்திற்கு முன்பாக டிராபிக் டெஸ்ட் எடுக்க வேண்டும் இதற்காக பயணிகள் மதுரை விமான நிலையத்தில் உள்ள நேஷனல் லேப் நிறுவனம் மூலம் | டிராபிக் டெஸ்ட் எடுத்தனர் இதில் இதில் 172 பயணிகளுக்கு ராபிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது .இதன் முடிவுகள் வர தாமதமானதால் காலை 11 மணிக்கு கிளம்பி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் 2 மணி நேர தாமதத்தினால் பகல் ஒன்றரை மணிக்கு புறப்பட்டு சென்றது.இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் ராபிட் டெஸ்ட் ரிசல்ட் தாமதத்தினால் 44 பேர் மதுரையிருந்து துபாய் செல்வது கடினம் என கூறப்படுகிறது.ராபிட் டெஸ்டிற்கு ரூபாய் 2112 என வசூலித்த நிலையில் அவர்களுக்கு. தாமதமான ரிஸல்ட் வந்ததால் தூபாய் புறப்பட தடை ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்