மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய ரேஷன் கடை ஊழியர்கள் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

100 ஆண்டுகள் பழமையான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் வசதிக்காக 4 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் ஆனது அருகிலேயே 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இது திறக்கப்பட்டது இதில் மூன்று வழிகளில் செல்வதற்காக லிப்பிடுகள் அமைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்று ரேஷன் கடை ஊழியரான விக்கிரவாண்டி சேர்ந்த அமுதா மற்றும் பிரகாஷ் ஆகியோர் அலுவலக வேலைக்காக முதல் தளத்தில் இருந்து மேலே சென்று உள்ளார்கள் அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் இடையிலேயே நின்று உள்ளது பதறிப்போன அவர்கள் கூக்குரல் எழுப்பவே அருகே உள்ளவர்கள் கதவை திறக்க முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி கதவை உடைத்து இருவரையும் மீட்டனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்த மதுரை மாவட்ட ஆட்சியாளர் லிப்ட் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டுள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..