மதுரை பழங்காநத்தம் நேரு நகர் திருவள்ளுவர் நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மணிமாலா டிஜிட்டல் ஸ்டுடியோ மாடக்குளம் மெயின் ரோடு கிருஷ்ணா நகரை சேர்ந்த சங்கர் என்பவர் நடத்திவருகிறார் நேற்று இரவு எப்பொழுதும் போல் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் இன்று அதிகாலை கடை உடைத்து இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் சங்கருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பது சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள திருமணத்திற்கு வீடியோ பதிவு செய்யக்கூடிய கேமரா ஒன்று மற்றும் கணினி சிபியு உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.