
மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு கைது செய்யும் நடவடிக்கையை காவல் துறையினர் மற்றும் குழந்தை நல அமைப்பினர் தீவிரப் படுத்தியுள்ளனர்.மதுரை மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இது தொடர்பான புகார்கள் அதிகளவில் குழந்தைகள் நல அமைப்பினருக்கு வந்த நிலையில், மாநகர காவல்துறையின் விபச்சாரம் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.முதற்கட்டமாக, மதுரை ரயில் நிலைய வாயில் மற்றும் காலவாசல் பகுதிகளில் இருந்த சந்தேகிக்கும் படியான நிலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபர்கள் மற்றும் குழந்தைகளை மீட்டுள்ளனர். மேலும் இதேபோல் 6 குழந்தைகளை மீட்டுள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து இதே போல, மாநகர் முழுவதும் உள்ள நபர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் மீட்டு பழங்காநத்தம் சமுதாய கூடத்தில் வைத்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி எடுக்கப்படும் என காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.