Home செய்திகள் விவசாயிகள் 70 சதவிகிதம் மானியத் திட்டத்தில், சோலார் மின்மோட்டார் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்:

விவசாயிகள் 70 சதவிகிதம் மானியத் திட்டத்தில், சோலார் மின்மோட்டார் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்:

by mohan

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கீழப்பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம், மானியத் திட்டத்தில் முன்னோடி விவசாயி சோலார் மின்மோட்டார் பொருத்தப்பட்டு விவசாயப்பணிகள் மேற்கொண்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் .ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் முன்னிலையில், சோலார் திட்டம் பயன் குறித்து விவசாயிடம் கேட்டறிந்ததுடன், மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், வேளாண்மைத்துறையுடன் ஒருங்கிணைந்த துறைகளான வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதுடன், விவசாயப்பணிக்கு பிரதான தேவையாக கருதப்படும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும் வகையில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து சோலார் மின்மோட்டார் வழங்கி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியத்துடன் கூடிய இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், விவசாயிகள் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் நிலையை மாற்றி உடனடியாக விவசாயப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக , சோலார் திட்டம் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி, எளிதாக விவசாயிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.விவசாயிகள் சோலார் திட்டத்தில் பயன்பெற வேளாண் பொறியியல் துறையில் விண்ணப்பித்தால், உடனடியாக அலுவலர்கள் விளைநிலைங்களை பார்வையிட்டு சோலார் உபகரணங்களை பொருத்தி மின்மோட்டார் செயல்படும் வகையில் தேவையான பணிகளை செய்து கொடுப்பார்கள். இத்திட்டத்தில் 30 சதவிகிதம் விவசாயின் பங்களிப்பும், (ரூ.1,04,871) 70 சதவிகிதம் அரசு மானியமாகவும் (ரூ.3,49,56-) என, மொத்தம் ரூ.4,54,440 மதிப்பீட்டில் சோலார் மின்மோட்டார் பொருத்தப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும், சோலார் மின்மோட்டார் செயல்பாடு குறித்து மோட்டார் தயாரிக்கும் நிறுவனம் மூலம் பொறியாளர்கள் கண்காணித்து விவசாயிகளுக்கு ஏதுவாக இருந்து வருவார்கள். கடந்தாண்டு 22 விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி தடையின்றி விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நடப்பாண்டிற்கு விவசாயிகளிடமிருந்து, வேளாண் பொறியியல் துறையின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விவசாயிகள் மின்இணைப்பிற்காக காத்திருக்காமல், அரசு வழங்கும் 70 சதவிகிதம் மானியத்திட்டத்தை பயன்படுத்தி, தங்கள் தேவைக்கேற்ப சோலார் மோட்டார் இணைப்பு பொருத்தி விவசாயப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். இதேபோல், கடந்தாண்டை விட இந்தாண்டு பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில், இத்திட்டத்தை போல் வேளாண்மைத்துறையின் மூலம் கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் பண்ணைக்குட்டை அமைத்துத்தரப்படுகின்றன. விவசாயிகளுக்கு அமைக்கும் பண்ணைக்குட்டைகள் முழுமானியத் திட்டத்தின் கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. நடப்பாண்டில் 125 பண்ணைக்குட்டைகள் இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம், மழைக்காலங்களில் வரக்கூடிய தண்ணீர் பண்ணைக்குட்டைகளில் துவக்கி வைத்து விவசாயப்பணிகள் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நேரத்தில் நெல் சாகுபடி நிலத்தில் கடைசி கட்ட நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் இந்த பண்ணைக்குட்டைகள் பயன்பெறும். அதுமட்டுமன்றி, விவசாயிகளுக்கு இணைத்தொழிலாக அமைந்திடும் வகையில் மீன்வளர்ப்புக்கள் மூலம் 100 சதவிகிதம் மானியத்தில் மீன்குஞ்சுகள் வழங்கப்பட்டு அதை பண்ணைக்குட்டைகளில் வளர்க்கும் போது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு இலாபம் கிடைக்கும் வகையில் மீன்வளர்ப்பு மிகப்பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் ,ஆடுகள், கோழிகள், கறவைமாடுகள் போன்றவை விவசாயப்பணியின் போது, இணைத்தொழிலாக வளர்த்து பராமரிப்பதால் அதன்மூலம் ஆண்டு முழுவதும் நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் இத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் நல்லமுறையில் இத்திட்டங்களை பயன்படுத்தி வேளாண் பணிகளை தொய்வின்றி மேற்கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.இச் செய்தியாளர் பயணத்தின் போது, வேளாண்மைத் துறை இணை இயக்குநர்வெங்கடேஸ்வரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்விஜயகுமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்அழகுமலை, வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள் பன்னீர்செல்வம்,கதிரேசன், வேளாண் பொறியியல்துறை உதவிப் பொறியாளர்கள்ஜெகநாதன்,சுப்பிரமணியன், முன்னோடி விவசாயி,குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!