Home செய்திகள் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின்ப நிறுவனர் சிவகுமார் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி.

சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின்ப நிறுவனர் சிவகுமார் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி.

by mohan

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார், உதவியாளர் மதார்ஷா ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுகுழந்தைகள் விற்பனை செய்த விவகாரத்தில் ஆவணங்களை மாற்றி முறைகேடாக பதிவு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளதால் ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் ஆதரவற்றோர் காப்பகம் அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் முதியோர்கள் ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வந்தனர்.இன்னிலையில் கொரோனா தொற்று காலத்தில் போது இரண்டு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி வேறு நபர்களுக்கு குழந்தைகளை விலைக்கு விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் இயக்குனர் சிவகுமார், இவரது உதவியாளர் மதார்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட 7 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிவகுமாரின் உதவியாளராக பணிபுரிந்த மதர்ஷா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி குழந்தைகளை சட்டவிரோதமாக பிறருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுஇதில் ஆவணங்களும் முறைகேடாக தயார் செய்யப்பட்டுள்ளது ஆவணங்கள் தயார் செய்வதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது என்று கூறிய நீதிபதி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞர் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறியதனால் மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!