திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது இங்கு தலைமை ஆசிரியராக உள்ள விநாயகமூர்த்தி என்பவருக்குதமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டதுவிநாயகமூர்த்தி தலைமை ஆசிரியர் பணிக்கு வந்த பின் மாணவர் சேர்க்கை மற்றும் நவீன மயமாக்குதல்திட்டத்தின் மூலம் இண்டர்காம் வசதி மற்றும் மாணவர்கள் அறிவியல் திறனை வளர்ப்பதற்காக இஸ்ரோவில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற வைத்தது.முன்மாதிரியாக தனது மகனையே அரசு பள்ளியில் சேர்த்தது போன்ற பல்வேறு சாதனைகளை புரிந்தார்இதனால் நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரை பாராட்டும் விதமாக சந்தனமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..