Home செய்திகள் அரசு மதுபானக்கடை பின்பக்க கதவை உடைத்து கொள்ளை முயற்சி ரூபாய் ஒரு லட்சத்தி இருபதாயிரம் பணம் தப்பியது போலீசார் விசாரணை.

அரசு மதுபானக்கடை பின்பக்க கதவை உடைத்து கொள்ளை முயற்சி ரூபாய் ஒரு லட்சத்தி இருபதாயிரம் பணம் தப்பியது போலீசார் விசாரணை.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இச்சம்பவம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்திருமங்கலம் பேருந்து நிலையம் எதிரே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் அரசு மதுபான கடையை அடைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மதுபானக்கடை அருகே உள்ள பேக்கரியில் தண்ணீர் மோட்டார் போடுவதற்காக பின்பக்கம் சென்றபோது அரசு மதுபானக்கடை பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அரசு மதுபான கடை பணியாளருக்கு தகவல் கொடுத்தனர் இதனைத் தொடர்ந்து அரசு மதுபான கடை பணியாளர்கள் வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறக்க முற்பட்ட போது திறக்க முடியவில்லை இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறக்க முடியாததால் பின்பக்கமாக வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது மேலும் அரசு மதுபான கடை ஷட்டரும் உடைக்கப்பட்டிருந்தது மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் பணம் வைக்காமல் மதுபான பாட்டில்களுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை போகவில்லை மேலும் மதுபான பாட்டில்கள் கணக்கு எடுத்த பின்பே மது பாட்டில்கள் கொள்ளை போனது தெரிய வரும் என அரசு மதுபான கடை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர் மேலும் முன்பக்க கதவு துணியால் கட்டப்பட்டிருந்தது இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கொள்ளை சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் ஆய்வாளர் மாய ராஜலட்சுமி உதவி சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!