சூரிய இயற்பியல், காற்றியல், வானியல் ஆகிய அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய எர்பெர்ட் ஃபிரீடுமேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 09,2000).

எர்பெர்ட் ஃபிரீடுமேன் (Herbert Friedman) ஜூன் 21, 1916ல் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் சாமுவேல் என்பவருக்கும் இரெபாக்கா ஃபிரீட்மேனுக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் மரபுவழி யூதர். இவர் நியூயார்க் நகருக்கு இந்தியானாவில் உள்ள எவான்சுவில்லியில் இருந்து புலம்பெயர்ந்தவர். நியூயார்க்கில் இவர் கலைப்படச் சட்டக்க் கடையை மன்ஃஆட்டனில் நிறுவினார். ஃபிரீடுமேனின் தாயார் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர். இளமையில் இவர் ஓர் ஏதிலிச் சிறுவனாக ஓவியராகத் தனது படங்களை விற்றே பிழைத்துள்ளார். இவர் 1932ல் புரூக்ளின் கல்லூரியில் கலையியல் முதன்மைப் பாடத்தில் சேர்ந்தார், என்ராலும் அங்கு இயற்பியலில் தேறிப் இலவல் பட்டம் பெற்றுள்ளார். இவர் இயற்பியல் பேராசிரியரான முனைவர் பெர்னார்டு குரெல்மேயரால் பெரிதும் கவரப்பட்டு அவர் பரிந்துரை பேரில் ஜான் ஃஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் உதவிதொகை பெற்று சேர்ந்துள்ளார். இங்கே இவரது பேராசிரியரின் தந்தையார் செருமானிய மொழித்துறைத் தலைவராக பணிபுரிந்தவர்.எர்பெர்ட் ஃபிரீடுமேன் இலிண்டன் ஜான்சன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அமெரிக்க அணுவாற்றல் ஆணையத்தின் பொது அறிவுரைக்குழுவிலும் குடியரசுத் தலைவர் நிக்சன் அறிவியல் அறிவுரைக்குழுவிலும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் விண்வெளி அறிவியல் ஆளுகை குழுமத்திலும் பணிபுரிந்துள்லார். சூரிய இயற்பியல், காற்றியல், வானியல் ஆகிய அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய அமெரிக்க முன்னோடியாவார். இவர் அரசியல் மேதையும் அறிவியலுக்காக வாதிடுபவரும் ஆவார். இவர் தன் வாழ்நாளில் அரசு வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கம்(1964), அமெரிக்க வானியல் கழகத்தின் ஃஎன்றி-நோரிசு விரிவுரைத் தகைமை, தேசிய அறிவியல் விருது(1968), அமெரிக்கப் புவிபுறவியல் ஒன்றியத்தின் வில்லியம் பவுலே பதக்கம்(1981), இயற்பியலுக்கான வுல்ஃப் அறக்கட்டளைப் பரிசு, பிராங்க்ளின் நிறுவனத்தின் ஆல்பர்ட் ஏ.மைக்கல்சன் பதக்கம்(1972) எனப் பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.எர்பெர்ட் ஃபிரீடுமேன் 1960ல் அமெரிக்கத் தேசியாறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார். இவர் அமெரிக்க மெய்யியல் கழகத்தின் உறுப்பினராக 1964ல் தேர்வு செய்யப்பட்டார். அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய எர்பெர்ட் ஃபிரீடுமேன் செப்டம்பர் 9, 2000ல் தனது 84வது அகவையில் புற்றுநோயால் வ்ர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்டன் வீட்டில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

உதவிக்கரம் நீட்டுங்கள்..