தமிழக அரசின் சிறந்த நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி.

நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் தங்களது விருது தொகையினை நிவாரண நிதி மற்றும் கீழடி செலவின நிதிக்கு அளிப்பது மிகவும் பெருமையாக உள்ளது என மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பெருமிதம்.மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 13 சிறந்த நல்லாசிரியர்களுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.நிகழ்வில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மு.பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.மதுரை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரிய , ஆசிரியைகளுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.விருது பெற்ற 13ஆசிரிய, ஆசிரியைகளில் மதுரை லெட்சுமிபுரம் டி.வி.எஸ் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, மதுரை முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை பரமேஸ்வரி உள்ளிட்ட 5 ஆசிரியைகள், மதுரை தபால் தந்தி நகர் புனித மைக்கேல் மேல்நிலை பள்ளி முதல்வர் மதிவதனன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மொத்தம் 9 ஆசிரிய, ஆசிரியைகள் தங்களுடைய விருது தொகையான (10000×9) ரூபாய் 90 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்கள்.மதுரை பொய்கை கரைப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ராஜ் தனது விருது தொகை ௹பாய் 10 ஆயிரத்தை கீழடி அகழ்வாராய்ச்சி செலவுகளுக்கான நிதிக்காகமதுரை பாராளுமன்ற உறுப்பின் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மு.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.மதுரை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது, ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் அவர்களில் 9 நபர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தங்களது நிதியை திரும்ப கொடுத்துள்ளார்கள் . இது ஒரு முன் மாதிரி மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேட்டி அளித்துள்ளார்இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்நல்லாசிரியர் விருது பெறுகின்ற 13 நபர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் ஆசிரியர்கள் என்றைக்குமே முன்னுதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக விருது தொகையான 10 ஆயிரம் ரூபாயை ஒன்பது ஆசிரியர்கள் முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்கள் இது ஒரு முன்மாதிரியான செயல் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் எனவும்இந்தியாவிலேயே அகழாய்வு பணிக்கு தொல்லியல் துறைக்கு இத்தனை கோடி ஒதுக்கி இருக்கிற அரசாக மாநில அரசாக தமிழக அரசு இருக்கிறது, நேற்றைய தினம் சட்டப்பேரவையை தொல்லியல் துறை சார்ந்த செயல்பாடு தமிழகம் வளர்ச்சி பண்பாட்டுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியிருக்கிறது தமிழக அரசுக்கு பணிவான அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்