
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் கடந்த 1984ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால் இரண்டடுக்கில் முடிக்கப்பட்ட 120 வீடுகள் அந்த பகுதி மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு அரசு மானிய தொகையில் அவர்களுக்கே விற்பனை செய்யப்பட்டது.மேலும் குடியிருப்பு வாசிகள் குடிநீர், மின் விநியோகம், மராமத்து பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிர்வகித்து கொள்ள சுயமாக சங்கம் ஏற்படுத்தி குடியிருந்து வந்தனர்.குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக அங்குள்ள வீடுகள் முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் ஆங்காங்கே கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது.இந்த நிலையில் இன்று மதுரையில் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை மாநகர் பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. கனமழையால் வீட்டின் மேல்தளத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது.இதுகுறித்து தகவலறிந்து வந்த மதுரை மாநகர தீயணைப்புப் படை வீரர்கள் குடியிருப்பில் வசித்து வந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.தொடர்ந்து அவர்களுக்கு வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தற்காலிக தங்குமிடத்தில் இடம்பெற அறிவுறுத்திய நிலையில் அதனை ஏற்காத குடியிருப்புவாசிகள் வருவாய் கோட்டாட்சியரிடம் முறையிட்டனர்.தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழலில் வீடுகளுக்கு உயிர் சேதத்தை தவிர்க்கும் பொருட்டு முறையாக மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைக்குப் பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.