ஒத்தக்கடையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா மீன்கள் 1 ரூபாய்க்கு 1 கிலோ கடல் மீன்திறப்பு விழா சலுகை.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ள மன்னார் வளைகுடா மீன்கள் விற்பனையகம்.இங்கு மீன்கள் கடலில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதுபுதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த மீன்கள் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் புது யுக்தியை எடுத்துள்ளார்.அதாவது பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ எந்த வகையான மீன்கள் வாங்கினாலும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளார்,அதன்படி காலையில் திறக்கப்பட்ட மீன் கடையில் சுற்றுப்புற பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர்,உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டஇயக்குனர் கிட்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..