5 மாவட்ட விவசாயத்திற்கு அணை கட்டிய பென்னிகுக் மதுரையில் எங்கு வாழ்ந்தார் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்புபொறுப்பேற்றுள்ள அரசு மக்களுக்கான திட்டங்களை கொடுக்கின்ற பொழுது மதுரைக்காரன் என்ற முறையில் இரு கரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறேன்.டாக்டர் கலைஞர் பெயரில் மதுரையில் பல கோடி மதிப்பில் நூலகம் அமைப்பதற்கு அதிமுக சார்பில் வரவேற்கிறோம், நூலகம் தொடர்பாக செய்திகளில் வருவதை பார்த்த பொழுது பென்னிகுயிக் வாழ்ந்து-மறைந்த இடத்தை இடித்து நூலகம் அமைப்பதாக வந்த செய்தியைக் கண்டு இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசினேன்.மதுரையில் அவர் எங்கு வாழ்ந்தார் எந்த இடத்தில் வாழ்ந்தார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்., அதிமுக ஆட்சியில் 1296 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு அணை விரிவாக்கம் செய்யப்பட்டது.5 மாவட்ட விவசாயத்திற்காக அணை கட்டிய பென்னிகுக் மதுரையில் வாழ்ந்தார்., அவர் எங்கு வாழ்ந்தார் என்பதை கேட்பது ஜனநாயக கடமைஅதனை அரசாங்கம் தான் தெளிவுபடுத்த வேண்டும்.! என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..