மதுரையில் எஜமானர் குடும்பத்தை கொடிய விஷம் கொண்ட கருந் தேளிடமிருந்து காப்பாற்றிய நன்றியுள்ள ஜீவன்.

மதுரை பொன்மேனி பகுதியில் நெளரோஜி முத்துச்செல்வி தம்பதியினர் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பாசமாக மேக்ஸ் புரோவ்னி என்ற பெயருடன் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர் செல்லப்பிராணியும் நன்றாக துங்கிக்கொண்டு இருந்தது அந்த சமயத்தில் வீட்டினுள் கருந்தேள் ஒன்று நுழைந்தது தூங்கிக்கொண்டிருந்த செல்லப்பிராணியை அருகில் சென்ற கருந்தேள் கடித்தது உடனடியாக சுதாகரித்து எழுந்த செல்லப்பிராணி அந்த கருந்தேளை குறைத்துக் கொண்டே கடிக்க முற்பட்டது செல்லப்பிராணி குறைப்பதை உணர்ந்த எஜமானர் வெளியே வந்து பார்த்தபோது தங்கள் செல்லப்பிராணி கருந்தேளுடன் சண்டையிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் எஜமானர் உடனடியாக தங்களது செல்லப்பிராணியை பாதுகாப்பாக காப்பாற்றினர் அதனைத்தொடர்ந்து அந்த கருந்தேளை வீட்டின் வெளியே பாதுகாப்பாக விரட்டி அடித்தது செல்லப்பிராணி கடவுள் போல் காப்பாற்றிய செல்லப்பிராணி மேக்ஸ் புரோவ்னியை குடும்பத்தினர் அனைவரும் பாசமுடன் வணங்கினர்வீட்டில் புகுந்த கொடிய விஷம் கொண்ட கருந்தேளிடமிருந்து எஜமானர் குடும்பத்தை சமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய நன்றியுள்ள ஜீவனின் சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion