இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் காட்டு பன்றி வேட்டையாடியவர் கைது .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வனசரக வன பகுதிகளில் ரேந்து பணிகளை தீவிர படுத்த வனத்துறை கல இயக்குனர் தீபக் S பீல்கி , துணை இயக்குனர் குருசாமி தபேலா .உத்தரவிட்டனர் உத்தரவின் பெயரில் இராஜபாளையம் வனசரக அலுவர் சக்தி பிரசாத் கதிர்காமன் , வனவர் குருசாமி, வனகாப்பாளர்கள் திருப்பதி . ராமேஷ்.ராமசாமி, ஆகியோர்.இராஜபாளையம் சேத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலை புல்பத்தி காடு எல்கை தொட்டச்சியம்மன் கோவில் பகுதியில் ரேந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றி வேடையாட்டி இறைச்சி விற்பனையில் ஈடுபட முயன்ற சுந்தரநாச்சியார்புரம் பகுதியை அய்யனார் மகன் சேர்ந்த ராம அழகு (43) , புத்திர கொண்டான் மகன் பிள்ளையார் சாமி (31)இருவர் கைது செய்து இவர்களிடம் இருந்து 10 நாட்டு வெடிகுண்டுகள், 9 கிலோ இறைச்சி . இருசக்கர வகனம் ஒன்று பறிமுதல் செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்மேலும் தலைமறைவான காசிராஜ் மகன் ஆசைகனி (28).வீரராஜ் மகன் காளி ராஜ் (21) ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்