
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோவில். திருக்கோயில்களில் உள்ள யானைகளை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்விற்கான இன்று யானை அறிவியல் ஆய்வாளர் மற்றும் மாநில வனவிலங்குகள் கமிட்டியை சார்ந்த டாக்டர். என். சிவகணேசன் அவர்கள் இத்திருக்கோயிலில் உள்ள சுந்தரவல்லி தாயார் யானையை ஆய்வு செய்தார். யானையின் இருப்பிடம், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் விபரம், யானையின் ஆரோக்கியம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்கள். நிகழ்வின் போது யானை எவ்வாறு விரைவாக நடக்கின்றது, எவ்வாறு உணவு உண்கிறது , உடல்நிலை உள்ளிட்ட ஆய்வும் நடைபெற்றது. ஆய்வின்போது திருக்கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர் தி.அனிதா அவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் நாராயணி, பிரதீபா, அசோக் குமார் மற்றும் பேஷ்கார் கருப்பையா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.