மதுரையில் டாஸ்மாக் மேலாளர்களை கண்டித்து, பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் செயல்படும், டாஸ்மாக் மேலாளர்களை கண்டித்து, மதுரை அண்ணாநகரில், செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், கையூட்டு பெற்றுக் கொண்டு, பணியிட மாறுதல் வழங்கி வருவதாகவும், நிர்வாக இயக்குநரின் உத்தரவை மதிப்பதில்லையெனக் கூறி, பணியாளர்கள் சங்கத்தினர், மாநில செயல் தலைவர் பழனிபாரதி தலைமையில், மாவட்டத் தலைவர்கள் பெரியசாமி, குருசாமி, சத்தியமூர்த்தி, வெங்கடேசன் ஆகியோர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோரிக்கையை வலியூறுத்தி, மாநிலத் தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் கோதண்டம், பொருளாளர் ஜெய் கணேஷ் ஆகியோர் பேசினார்கள்.ஆர்ப்பாட்டத்தை, சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்