
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் விக்னேஸ்வரநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மூங்கில் மர விதைகள் நடப்பட்டன.வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 120 பூங்காக்கள் உள்ளன. அதில் முங்கில் மரம் வளர்க்கவிதைகளை நட்டுவைக்க 4 மண்டலத்தில் உள்ள அனைத்து சுகாதார அலுவலர்களுக்கும் ஆணையர் வலியுறுத்தினார்.2-வது மண்டலத்தில் இப்பணி துவக்கிவைக்கப்பட்டது. இதில் ஆணையர் சங்கரன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையாளர் சம்பத், பச்சையப்பன், உதய அரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.