மதுரையில் டவுன் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ சங்கம் இணைந்து ரத்த தான முகாம்:

மதுரைடவுன் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 36-வது ஆண்டு ரத்த தான முகாம், இந்திய மருத்துவக் சங்க அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆர்.வி. என் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் ,மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல் தலைமையில், ரோட்டரி உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ரவீந்திரன், செயலாளர் டாக்டர் அமானுல்லா,டவுன் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் நெடுஞ்செழியன், ரோட்டரி துணை ஆளுநர் கார்மேகம், ரத்த வங்கி அதிகாரி ஜெசிந்தா ஸ்ரீ ரங்கராஜன் பி டி ஆர் பொறியியல் கல்லூரி சேர்மன் தனவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ரத்ததான முகாமில், 50 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்