அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நம் தாய் திருநாட்டின் 75வது சுதந்திர தின விழா தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படியும், பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படியும்,எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் ராமகிருஷ்ணன் அவர்கள் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி தலைமை உரையாற்றினார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சசிகுமார், பகுர்தின், அயூப் கான் கேசர் கான், கந்தசாமி ஜெயக்குமார் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆசிரியர் ஞானசேகரன் இக்கல்வி ஆண்டில் கல்வி செயல்பாடுகளை எடுத்துரைத்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்யப்பட்டது.சுதந்திர தின விழாவின் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.இறுதியாக ஆசிரியர் குமார் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சதக்கத்துல்லா, ஆரோக்கியதாஸ், சுரேஷ் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மதிவாணன், ஆல்பர்ட் ஆகியோர் செய்திருந்தனர்…

உதவிக்கரம் நீட்டுங்கள்..