இராஜபாளையம் அருகே புத்தூர் கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் மயானம் அருகே பெரிய குளம் கண்மாய் கரையோரம் தனியார் விவசாய கிணற்றில் 50 வயது மதிப்புள்ள பெண் சடலம் கிடப்பதாக தளவாய்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது தகவலின் பேரில் தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது 50 வயது மதிக்கத்தக்க பெண் இரண்டு நாளைக்கு முன்பு இறந்த அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்து .மேலும் இறந்த பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் இவர் யார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இவரை யாரும் அடித்து கொலை செய்து இந்த கிணற்றில் வீசி சென்றனர் என்ற கோணத்தில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..