
மதுரை ஆதீனம் என அழைக்கப்படும் அருணகிரிநாதர் சுமார் 1000 கோவிலுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்து பெருமைக்குரியவர் மேலும் இவரது கீழ் நான்கு பெரிய கோயில்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கோவில்களும் இவரது பராமரிப்பில் இருந்து வந்தது மதுரை ஆதீனம்கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாதர். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.இவரது நல்லடக்கம் ஆனது மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ளது அதில் இன்று நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.